'துள்ளாத மனமும் துள்ளும்' டவுசர் பாண்டி குடும்பத்திற்கு உதவிய இளையதளபதி


sivalingam| Last Updated: வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (07:00 IST)
இளையதளபதி விஜய் நடித்த ரொமான்ஸ் படங்களில் 'காதலுக்கு மரியாதை' படத்திற்கு பின்னர் மிக முக்கியமான படம் 'துள்ளாத மனமும் துள்ளும்' படம் தான். விஜய், சிம்ரன் நடித்த இந்த படம் தான் பிரபல இயக்குனர் எழில் இயக்கிய முதல் படம்.


 
இந்த படத்தில் காமெடி வேடம் ஒன்றில் நடித்திருந்த டவுசர் பாண்டி என்ற நடிகர் இந்த படம் வெளிவந்து ஒருசில நாளில் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தார். இதனால் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் வருத்தம் அடைந்தனர்.

இந்த நிலையில் டவுசர் பாண்டியின் குடும்பம் தற்போது வறுமையில் வாடுவதை தனது ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் மூலம் அறிந்த விஜய் டவுசர் பாண்டியின் குடும்பத்திற்கு பண உதவி செய்துள்ளார். அவருடைய உதவியை பெற்ற டவுசர் பாண்டி குடும்பத்தினர் விஜய்க்கு நன்றி கூறினர். விஜய் செய்த இந்த உதவியை தங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம்' என்று அவர்கள் கூறினர்.


 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :