வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 12 நவம்பர் 2016 (15:21 IST)

முழுக்க வெள்ளையில் தயாரான விஜய் படம்

தமிழில் தயாரிக்கப்படுவதில் 90 சதவீதப் படங்களில் கறுப்பும் வெள்ளையுமாகத்தான் பணம் புழங்குகிறது. அதுவும் பெரிய பட்ஜெட் என்றால் கண்டிப்பாக கறுப்பு இருக்கும்.

 
ஆனால், பரதன் இயக்கத்தில் விஜய்யை வைத்து பைரவா படத்தை இயக்கியிருக்கும் விஜயா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை முழுக்க ஒரு வெள்ளை அறிக்கைப் போல் தயாரித்துள்ளது. அதாவது படத்தின் மொத்த செலவையும் வங்கிக் கணக்குகள் வழியாகவே செய்துள்ளது. செக், டிடிதான் அதிகமும். 
 
500 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டதால் பலரும் கலக்கத்தில் இருக்க, விஜயா புரொடக்ஷன்ஸ் மட்டும் நிம்மதியாக உள்ளது.
 
பைரவா படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை ஸ்ரீ க்ரீன் சரவணன் வாங்கியுள்ளார்.