வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 5 ஜூன் 2015 (10:07 IST)

வைரமுத்து பாடலை பாடிய விஜய்

ஜெயகாந்தனின் இறுதி ஆவணத்தை எழுதி வாங்கிய வைரமுத்துவை சமீபமாக பார்க்கவே முடியவில்லை. கலைஞரின் பிறந்தநாள் விழாவிலும் மிஸ்ஸிங். 
அதேநேரம் அவரது அருமை பெருமைகளை இயக்குனர்கள் எடுத்துரைப்பது போன்ற பாராட்டு செய்திகள் தவறாமல் வந்து கொண்டிருக்கின்றன. ஜெயகாந்தனின் இறுதி ஆவண விஷயத்தில் இணைய பயனாளிகள்தான் வைரமுத்துவை அதிகம் கழுவி ஊற்றினார்கள். அதனால், இணையத்தில் தனக்கென வாசகர் வட்டத்தை ஏற்படுத்த தனி இணையதளம் தொடங்குகிறார்.
 
விஷயம் அதுவல்ல. புலி படத்தில் வைரமுத்து எழுதிய பாடலை விஜய் பாடியிருக்கிறார்.
 
திரைப்படங்களில் சமீபமாக பாடமலிருந்த விஜய் துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் பாடலை பாடினார். பாடல் ஹிட். அதன் பிறகு ஒவ்வொரு படத்திலும் பாடுகிறார். புலியிலும் ஒரு பாடலை பாடியுள்ளார். அதனை எழுதியவர் வைரமுத்து.
 
புலிக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.