’கொளுத்துங்கடா’: விஜய் பிறந்த நாளில் வெளியான அட்டகாசமான ’மாஸ்டர்’ போஸ்டர்

விஜய் பிறந்த நாளில் வெளியான அட்டகாசமான ’மாஸ்டர்’ போஸ்டர்
Last Modified திங்கள், 22 ஜூன் 2020 (06:16 IST)
விஜய் பிறந்த நாளில் வெளியான அட்டகாசமான ’மாஸ்டர்’ போஸ்டர்
தளபதி விஜயின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22ஆம் தேதி அவரது கோடிக்கணக்கான ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு கொரோனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவரது பிறந்தநாளை போஸ்டர்கள் ஒட்டி, அன்னதானம் செய்து, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி செய்து கொண்டாட முடியாமல், அடக்கமாகவே அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
இருப்பினும் இணையதளத்தில், சமூக வலைத்தளத்தில் உள்ள ரசிகர்கள் தளபதி பிறந்தநாளை அட்டகாசமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் மாஸ்டர் படக்குழுவினர்கள் ’மாஸ்டர்’ படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்

இந்த போஸ்டரை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டருக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது இந்த போஸ்டரில் தளபதி விஜய், தனது குழுவினர்களுடன் அட்டகாசமான டான்ஸ் ஆடும் ஒரு புகைப்படமும் தளபதிவிஜய் கூலிங்கிளாஸ் கண்ணாடி போட்டு தலை குனிந்தபடி ஆழ்ந்து யோசிக்கும்போது ஒரு ஸ்டில்லும் உள்ளது
மேலும் இந்த போஸ்டரில் ’கொளுத்துங்கடா’ என்ற அடைமொழியும் உள்ளதால் அதனையே விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்ட்டாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :