தளபதி 2: ரஜினி- மம்மூட்டியாக விஜய்- விக்ரம்: மணிரத்னம் அடுத்த படத்திற்கு ரெடி!!


Sugapriya Prakash| Last Modified புதன், 8 மார்ச் 2017 (15:15 IST)
மணிரத்னம் இயக்கத்தில் வந்த கேங்ஸ்டர் படங்களில் நாயகன் மற்றும் தளபதி ஆகிய இரண்டு படங்களுமே தற்போது வரை பேசப்பட்டு வருகிறது.

 
 
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 1991ம் ஆண்டு வெளிவந்த படம் தளபதி. இந்த படத்தில் ரஜினியும், மம்மூட்டியும் நண்பர்களாக நடித்திருந்தனர்.
 
இந்தப் படத்தின் 2 ஆம் பாகத்தை காற்று வெளியிடை படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்க உள்ளார். அதற்கான கதை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. 
 
இந்நிலையில், படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது பற்றிய தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. 
 
தளபதியில் ரஜினி நடித்த வேடத்தில் விஜய்யும், மம்மூட்டி ரோலில் விக்ரமும் நடிக்கிறார்களாம். இப்படம் தொடர்பாக இருவரிடமும் கதை சொல்லி சம்மதம் வாங்கியுள்ளார் இயக்குனர். 
 
இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :