Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய்யும், சூர்யாவும் ஐரோப்பாவில் என்ன பண்றாங்க?

cauveri manickam| Last Modified செவ்வாய், 9 மே 2017 (11:30 IST)
விஜய்யும், சூர்யாவும் தற்போது ஐரோப்பாவில் இருப்பதாகக் கூறுகிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

 

 
 

அட்லீ இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தற்போது ஐரோப்பாவில் நடந்து கொண்டிருக்கிறது. விஜய் மற்றும் காஜல் அகர்வால் இருவரும் மருத்துவர்களாக ஒரே மருத்துவமனையில் பணியாற்றும் காட்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார் அட்லீ.

குழந்தைகளுக்கு கோடை விடுமுறை என்பதால், அவர்களை அழைத்துக் கொண்டு ஐரோப்பாவுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்கள் சூர்யாவும், ஜோதிகாவும். அங்கு பல இடங்களை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜோதிகாவுக்கு ‘மகளிர் மட்டும்’ ரிலீஸ் இருப்பதாலும், சூர்யாவுக்கு ‘தானா சேர்ந்த கூட்டம்’ படப்பிடிப்பு பாக்கி இருப்பதாலும் விரைவில் சென்னை திரும்பி விடுவார்கள் என்கிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :