செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 11 ஜூன் 2019 (18:55 IST)

பிக்னிக் சென்ற இடத்தில் படு ரொமான்டிக்கான புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள். 
 
இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அளப்பறைகளை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என கடுப்பாகின்றனர். அந்த அளவிற்கு லூட்டியடிக்கும் இந்த ஜோடி புறாக்கள் திருமணத்தை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருக்கிறார்கள். ஆனால் ஊர்சுற்றும் நெருக்கமான புகைப்படங்கள் மட்டும் அவ்வப்போது வெளியாகி பலரையும் புகைய வைத்துவிடுகிறது. 
 
மேலும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் செய்தி வெளியாகி கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டது. அடிக்கடி டேட்டிங் செல்லும் இவர்கள் தற்போது  காதல் ஜோடிகளின் முக்கிய சுற்றுலாத்தளமாக பார்க்கப்படும்  சாண்டோரினி நகரில் இருவரும் ஜோடியாக வலம் வருகின்றனர். இந்த நகரம் புதுத்தம்பதிகள் ஹனிமூன் செல்லும் முக்கிய நகரமாக இருந்து வருகிறது. 
 
இளசுகளின் கனவு கன்னியான நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் சேர்ந்து ஊரசுற்றும் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் கடுப்பாகி கண்டபடி அவரை கரித்துக்கொட்டிய நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாராவின் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நயனின் ரசிகர்கள் "என் தலைவி இம்புட்டு அழகா" என வர்ணித்து வருகின்றனர்.