1. செய்திகள்
  2. செய்திகள்
  3. இண்டர்நெட் பக்கம்
Written By
Last Updated : சனி, 3 செப்டம்பர் 2016 (11:52 IST)

மலர் டீச்சராக ஸ்ருதி : மரண கலாய் கலாய்த்த வீடியோ மீம்ஸ்

மலர் டீச்சராக ஸ்ருதி : மரண கலாய் கலாய்த்த வீடியோ மீம்ஸ்

நடிகர் நிவின்பாலிக் கதாநாயகனாக நடித்து மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பிரேமம். அதில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்து ரசிகர்களின் மனதை அள்ளினார்.


 

 
மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். சமூகவலைதளங்களில் அவரின் புகைப்படங்கள் ஏராளமாக உலாவந்தன.
 
இந்நிலையில், பிரேமம் படத்தின் தெலுங்கு பதிப்பில், மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இந்த செய்தி வெளியான போதே சமூகவலைத்தளங்களில் பல ரசிகர்கள் கிண்டல் அடித்தனர்.
 
இதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன் “அதலாம் நல்லாதான் இருக்கும்” என்று டிவிட்டரில் கூறியிருந்தார்.
 
தற்போது அப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் மலர் டீச்சராக ஸ்ருதியை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கிண்டல் அடித்து வீடியோ மீம்ஸ் தயாரித்து சமூகவலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.
 
வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அந்த மீம்ஸ்களை பாருங்கள்...
 
வீடியோ-1
 


வீடியோ-2