Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வேலைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Sasikala| Last Modified சனி, 22 ஏப்ரல் 2017 (11:33 IST)
மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்' படத்தில் நடித்து வருகிறார். சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

 
இப்படத்தின் மூலம் மலையாள நடிகர் பகத் பாஸில் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். மேலும் சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து  வருகின்றனர். 
 
சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோ ஒன்றில் சேரி போன்ற பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டு  காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை, 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜுன் 5-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சரஸ்வதி பூஜை விடுமுறை நாளில் அதாவது செப்டம்பர் 29ல் படம் வெளியாக உள்ளதாக 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :