Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

'வேலைக்காரன்' 2வது லுக் வெளியீடு: முதல்முறையாக ஃபகத் பாசில்

செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (05:01 IST)

Widgets Magazine

'வேலைக்காரன்' 2வது லுக் வெளியீடு: முதல்முறையாக ஃபகத் பாசில்
 
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கியுள்ள வேலைக்காரன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த படம் வரும் ஆயுத பூஜை திருநாளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. 
 
ஏற்கனவே இந்த படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட்லுக், அதாவது ஒரு கையில் பெட்டி இன்னொரு கையில் அரிவாள் உடைய ஸ்டில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இன்று அதிகாலை 2வது லுக் வெளியாகியுள்ளது.
 
இந்த புதிய ஸ்டில்லில் சிவகார்த்திகேயனுடன் முதன்முதலாக ஃபகத்பாசில் லுக்கும் வெளியே தெரிந்துள்ளது. பகத்பாசில் இந்த படத்தில் நெகட்டிவ் வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று பகத்பாசிலின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், சினேகா, பிரகாஷ்ராஜ், ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ ஷங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவும், விவேக் ஹர்சன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். இந்த படத்தை 24ஏம் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. 
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

யாரை வேண்டுமானாலும் நாமினேட் செஞ்சுக்கங்க: நாங்க ஓட்டு போட்றதா இல்லை

ரைசா ஒருவர் மட்டுமே சிறிது ஆறுதல் அளிக்கின்றார். ஆனாலும் இவர் ஓவியாவிடம் செய்த லீலைகளை ...

news

பின்னால் தொடர்ந்து வந்த வாலிபரி ஓங்கி அடித்த விஜய் நாயகி

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' படத்தின் நாயகியும், ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து ...

news

யோகிபாபுவை மெர்சலாக்கிய தளபதி விஜய்

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் மூன்று வேடத்தில் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் ...

news

'பாரதி கண்ட புதுமைப்பெண் ஓவியா: இயக்குனர் சீனுராமசாமி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறிய பின்னர் ஜெயலலிதா இல்லாத அதிமுக போன்றும், ...

Widgets Magazine Widgets Magazine