'வேலைக்காரன்' டீசர் ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு


sivalingam| Last Modified சனி, 5 ஆகஸ்ட் 2017 (00:08 IST)
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கி முடித்துள்ள 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி தற்போது வெளிவந்துள்ளது.


 
 
'வேலைக்காரன்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24 ஏஎம் ஸ்டுடியோ நிறுவனத்தின் டுவிட்டரில் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில் இந்த படத்தின் செகண்ட் லுக் வரும் 8ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும், இந்த தேதி இந்த படத்தில் முக்கிய  வேடத்தில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :