வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (20:05 IST)

வீர சிவாஜி - பேரனின் படத்துக்கு தாத்தாவின் பெயர்

இன்றைய தேதியில் இடைவிடாமல் படங்களில் நடிக்கும் நாயகன் யார் என்றால், அது விக்ரம் பிரபுதான். வாகா படத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் அடுத்து, கணேஷ் விநாயக் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
 

 
கணேஷ் விநாயக் அருள்நிதி நடித்த தகராறு படத்தை இயக்கியவர். இவர்கள் இணையும் படத்துக்கு வீர சிவாஜி என பெயர் வைத்துள்ளனர். அதுக்காக சரித்திர படம் என்று எண்ண வேண்டாம். சாதாப்படம்தான் இது.
 
பிரபு குடும்பம் சிவாஜி என்ற பெயரில்தான் இன்னமும் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் எதிரொலிதான் இந்தப் பெயர்.