வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2015 (15:19 IST)

வெளிநாடுகளில் வேதாளம், தூங்கா வனம் வசூல்

யுஎஸ்ஸில் தூங்கா வனம் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. கடந்த ஞாயிறு வரை இப்படம் யுஎஸ்ஸில் 3.06 கோடிகளை வசூலித்துள்ளது. இங்கு வேதாளத்தின் வசூல் 1.88 கோடி.


 
 
யுகே மற்றும் அயர்லாந்தில் தூங்கா வனம் 49.76 லட்சங்களை வசூலித்துள்ளது. அங்கு வேதாளத்தின் வசூல் 1.63 கோடி.
 
ஆஸ்ட்ரேலியாவில் கடந்த ஞாயிறு வரை தூங்கா வனம் 30.43 லட்சங்களையும், வேதாளம் 79.03 லட்சங்களையும் வசூலித்துள்ளது. ஆஸ்ட்ரேலியாவில் காக்கா முட்டை வெளியாகியுள்ளது. முதல் வார இறுதியில் காக்கா முட்டை 11.41 லட்சங்களை தனதாக்கியுள்ளது.
 
மலேசியாவில் தூங்கா வனத்தின் வசூல் 1.08 கோடி. இங்கு வேதாளம் 3.53 கோடிகளை வசூலித்து முன்னிலை பெற்றுள்ளது.
 
யுஎஸ் தவிர்த்து அனைத்து வெளிநாடுகளிலும் வேதாளமே முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.