வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2016 (10:43 IST)

வரலட்சுமி, வினய் இணையும் அம்மாயி

வரலட்சுமி, வினய் இணையும் அம்மாயி

இது பேய்களின் காலம். கோடம்பாக்கத்தில் பூஜை போடும் படங்களில் நான்கில் மூன்று பேய், ஆவி கதைகளாக இருக்கின்றன. நேற்று அம்மாயி படத்தின் பூஜை. இதுவும் பேய் கதைதான். 


 
 
வரலட்சுமி, வினய் அம்மாயியில் நடிக்கின்றனர். தாரை தப்பட்டைக்குப் பிறகு வரலட்சுமிக்கு கிடைத்திருக்கும் தமிழ் வாய்ப்பு. வினய்க்கு...? ரொம்ப நாள் கழித்து. 
 
பூஜையின் போது படத்தைப் பற்றி பேசிய இயக்குனர் ஜி.சங்கர், அம்மாயி ஒரு உண்மைக்கதை என்றார். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இளையராஜா இசையமைக்கிறார்.