பிக்பாஸ் வீட்டிலிருந்து விடைபெறுகிறார் வனிதா? - ப்ரோமோ!

Last Updated: வியாழன், 4 ஜூலை 2019 (16:06 IST)
பிக்பாஸ் வீட்டிலிருக்கும் வனிதா கூடிய விரைவில் அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேற போவதாக சற்றுமுன் வெளிவந்துள்ள ப்ரோமோ வீடியோ தெரிவிக்கிறது. 
 
வனிதாவுக்கு அவரது இரண்டாவது கணவர் ஆனந்த்ராஜிக்கும் பிறந்த மகள் ஜெனிதாவை கடந்த பிப்ரவரி 6ஆம் வனிதா ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் இதுவரை ஜெனிதாவை முன்னாள் கணவரிடம்  திருப்பி அனுப்பவில்லை. இதனால் விரகத்தி அடைந்த  ஆனந்தராஜ் வனிதா மீது ஆல் கடத்தல் வழக்கு போட்டுள்ளார். 
 
இந்த வழக்கு குறித்து வனிதாவிடம் விசாரிக்க தெலுங்கானா போலீசார்  பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து விசாரணை நடத்தியதாகவும் கூடியவிரைவில் வனிதா கைது செய்யப்படுவார் எனவும் அவரது கணவர் ஆனந்த் ராஜ் பேட்டியளித்திருந்தார் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில் அது எதிரொலித்துள்ளது. 
 
தற்போது இந்த விவகாரம் குறித்து பிக்பாஸ் ஹவுஸ்சமேட்ஸ் உடன் இதனை பகிர்ந்துகொள்கிறார் வனிதா. எனவே அவர் குழந்தையை கணவரிடம் ஒப்படைத்தாரா? அல்லது பிக்பாஸ் வீட்டிலிருந்து கூடிய விரைவில் வெளியேறுவாரா? என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரிந்துவிடும். 
 


இதில் மேலும் படிக்கவும் :