வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : திங்கள், 22 ஜனவரி 2018 (20:08 IST)

அட்லீ உதவியாளர் இயக்கத்தில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்

அட்லீயிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த இனோக் இயக்கும் படத்தில் நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘நிமிர்’. நமீதா புரமோத், பார்வதி நாயர் என இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் மகேந்திரன், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜனவரி 26 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.
 
இதைத் தொடர்ந்து, சீனு ராமசாமி இயக்கத்தில் ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இந்த மாதம் இந்தப் படம் தொடங்குகிறது. அதன்பிறகு, விஷால் நடிப்பில் ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கியுள்ள பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கிறார். அதைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் இனோக் இயக்கும் படத்தில் நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இனோக், அட்லீயிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.