செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 20 டிசம்பர் 2014 (13:48 IST)

மீகாமன் - பாராட்டுடன் ஜகா வாங்கிய உதயநிதி

மகிழ் திருமேனி இயக்கத்தில் ஆர்யா - ஹன்சிகா நடித்துள்ள மீகாமன் டிசம்பர் 25 திரைக்கு வருகிறது. வசூல் செய்யும் என்ற நம்பிக்கை உள்ள படங்களை தனது ரெட் ஜெயண்ட் சார்பில் வாங்கி வெளியிடுவது உதயநிதியின் வழக்கம் என்பதால் படத்தை அவருக்கு திரையிட்டு காட்டினர்.
படத்தைப் பார்த்தவர், வித்தியாசமான ஆக்ஷன் படம் என்றெல்லாம் பாராட்டியவர் படத்தை மட்டும் வாங்கவில்லை. அட்லீஸ்ட் ஒரு ஏரியாவையாவது வாங்குவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்.
 
உதயநிதியின் இந்த பாராமுகத்துக்கு என்ன காரணம்? படம் பார்த்தால் ஒருவேளை விடை கிடைக்குமா?