ஹன்சிகாவை டீச்சராக்கிய உதயநிதி


லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 10 செப்டம்பர் 2015 (18:20 IST)
இது எப்போ நடந்தது என்று ஆச்சரியப்பட வேண்டாம். எல்லாம் சினிமாவுக்காக நடந்தேறிய நாடகம்தான்.
 
 
உதயநிதி இப்போது அகமது இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தி ஜாலி எல்எல்பி படத்தின் தமிழ் ரீமேக் இது.
 
இந்தப் படத்தில் உதயநிதிக்கு வழக்கறிஞர் வேடம். நாயகி கதைப்படி டீச்சர். இதற்கு ஹன்சிகாதான் சரிவருவார் என அவரை உதயநிதி கமிட் செய்துள்ளார். அதன் பிறகுதான் தெரிந்திருக்கிறது, ஹன்சிகாவின் சின்ன வயசு விருப்பம் டீச்சர் ஆவதுதானாம்.
 
அப்புறம் என்ன. ஆசிரியர் தினத்தன்று இனிப்புடன் ஹன்சிகாவை பள்ளிக்கூடம் ஒன்றில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறார்கள். திரையில் பார்த்தவரை நேரில் பார்த்தவர்களுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. 
 
ஹன்சிகாவின் வருகையால் அந்தப் பள்ளிக்கே அது மறக்க முடியாத ஆசிரியர் தினமாகியிருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :