வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (12:13 IST)

உதயநிதி எழில் இணையும் சரவணன் இருக்க பயமேன்

உதயநிதி எழில் இணையும் சரவணன் இருக்க பயமேன்

எழில் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் படத்துக்கு, சரவணன் இருக்க பயமேன் என்று பெயர் வைத்துள்ளனர்.

 
 
எழில், உதயநிதி முதல்முதலாக இணைந்திருக்கும் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காரைக்காலில் நடந்தது. உதயநிதியுடன் ரெஜினா, சிருஷ்டி டாங்கே, சூரி ஆகியோர் இதில் நடிக்கின்றனர்.

 
டி.இமான் இசையமைக்க, யுகபாரதி பாடல்கள் எழுதும் இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்டே தயாரிக்கிறது. படத்துக்கு சரவணன் இருக்க பயமேன் என்று பெயர் வைத்திருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.