1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 9 அக்டோபர் 2015 (19:23 IST)

10 எண்றதுக்குள்ள படத்துக்கு யு சான்றிதழ்

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடித்துள்ள 10 எண்றதுக்குள்ள படத்துக்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் அளித்துள்ளது.
 

 
முருகதாஸும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம், ரோடு மூவி வகையைச் சேர்ந்தது. அக்டோபர் 21 -ஆம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று படம் தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கு திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள், அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் அளித்தனர்.
 
அக்டோபர் 21 ரஜினி முருகன், நானும் ரவுடிதான் ஆகிய படங்களும் திரைக்கு வருகின்றன.