வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2016 (13:14 IST)

மாவீரன் கிட்டுவுக்கு யு சான்றிதழ்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள மாவீரன் கிட்டு படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

 
இமான் இசையமைத்திருக்கும் மாவீரன் கிட்டு படத்துக்கு  பாடல்கள் மற்றும் வசனம் எழுதியிருக்கிறார் யுகபாரதி. இறுதிகட்ட பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, படத்தை தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு.
 
இப்படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் யு சான்றிதழ் வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து டிசம்பர் 2 -ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.