Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

‘மீசைய முறுக்கு’ படத்துக்கு ‘யு’ சர்ட்டிஃபிகேட்


Cauveri Manickam (Abi)| Last Updated: புதன், 14 ஜூன் 2017 (16:58 IST)
ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து இயக்கியுள்ள ‘மீசைய முறுக்கு’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர் தணிக்கைக்குழு அதிகாரிகள்.

 

 
‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி, இயக்குநராகவும், ஹீரோவாகவும் அறிமுகமாகும் படம் ‘மீசையை முறுக்கு’. இந்தப் படத்துக்கு, பாடல்கள் எழுதி இவரே இசையமைத்துள்ளார். தன்னுடைய கல்லூரி வாழ்க்கையில் இருந்து, எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இசையமைப்பாளராக ஆனார் என்பதைத்தான் படமாக எடுத்துள்ளார்.
 
இந்தப் படத்தில், ஆத்மிகா ஹீரோயினாக நடித்துள்ளார். விவேக் மற்றும் விஜயலட்சுமி இருவரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். சுந்தர்.சி தயாரித்துள்ளார். விரைவில் இந்தப் படம் ரிலீஸாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மற்ற படங்களுக்கும் தொடர்ந்து இசையமைத்து வருகிறார் ஆதி. நயன்தாரா நடித்துள்ள ‘இமைக்கா நொடிகள்’ படமும் அதில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :