லாரன்ஸ் படம் வருவதால் தள்ளிப்போன இரு படங்கள்!!


Sugapriya Prakash| Last Modified வியாழன், 9 மார்ச் 2017 (15:22 IST)
லாரன்சின் மொட்ட சிவா கெட்ட சிவா வெளியானதால் இரு படங்களின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 
 
லாரன்சுக்கென்று தமிழகத்தில் ஒரு மார்க்கெட் உள்ளது. அவரது காஞ்சனா 2 படம் தமிழகத்தில் 100 கோடிகளைத் தாண்டி வசூலித்தது. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு லாரன்சின் பெயர் தமிழக அளவில் படுபிரபலம்.
 
பலமுறை தள்ளிப்போன லாரன்சின் மொட்ட சிவா கெட்ட சிவா படம் இன்று வெளியாகியுள்ளது. இதன் காரணமாக நாளை வெளியாவதாக இருந்த புரூஸ் லீ, எங்கிட்ட மோதாதே படங்களின் வெளியீடு தள்ளிப் போயுள்ளது. புரூஸ் லீ வரும் 17 -ஆம் தேதியும், எங்கிட்ட மோதாதே 24 -ஆம் தேதியும் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :