பாகுபலியாக மாறிய தினகரன் - வைரல் புகைப்படம்


Murugan| Last Modified புதன், 3 மே 2017 (16:11 IST)
சமீபத்தில் வெளியான பாகுபலி2 திரைப்படம் உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

 

 
இந்த படம் வசூலிலும் சக்கை போடு போடுகிறது. வெளியான 3 நாட்களில் இப்படம் ரூ.600 கோடி வருவாயை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்திய சினிமாவில் எந்த சினிமாவும் நெருங்காத ரூ.1000 கோடியை இந்தப் படம் பெற்றுத்தரும் எனக் கூறப்படுகிறது.
 
இது ஒரு பக்கம் என்றாலும், இப்படத்தை கிண்டலடித்தும், அல்லது இந்தப்படத்தை வைத்து மற்றவர்களை கிண்டலடித்தும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் மற்றும் புகைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
 
முக்கியமாக, டிடிவி தினகரனை, பாகுபலி படத்தின் ஹீரோ பிரபாஸை போல் சித்தரித்துள்ள இந்த புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :