வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Modified: திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (13:35 IST)

பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா நூற்றாண்டு விழா

தமிழின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் டி.எஸ்.பாலையா. காதலிக்க நேரமில்லை படத்தின் ரீமேக் உரிமையை நடிகர் மனோபாலா வாங்கினார்.

அப்போது, அப்படத்தை இயக்கிய ஸ்ரீதர், மனோபாலாவிடம் நாகேஷுக்குகூட வேறு ஆளை போட்டுக்கலாம். ஆனால் பாலையா வேடத்தில் யாரை நடிக்க வைக்க முடியும் என்று கேட்டார்.

பாலையாவுக்கு மாற்றாக யாரையும் அவர் இடத்தில் வைக்க முடியாது என்பதே பாலையாவின் தனித் திறமைக்கு சான்று.

டி.எஸ்.பாலையாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாட இருப்பதாக நேற்று நடந்த நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இது வரவேற்கத்தக்க முடிவு.

இதுதவிர லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய சினிமாவின் நூற்றாண்டுவிழாவுக்கு பத்து கோடி அளித்ததற்கும், எம்.ஜி.ஆர். திரைப்பட நகரில் 15 கோடி செலவில் இரு குளிர்சாதன படப்பிடிப்பு தளங்கள் அமைக்கப்படும் என அறிவித்ததற்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

பத்மபூஷன் விருது பெற்ற கமலுக்கு பொதுக்குழுவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.