செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 18 அக்டோபர் 2014 (15:08 IST)

முறிந்தது த்ரிஷா, ராணா காதல் - பிரிவுக்கு ராணாவின் காதலிகளே காரணம்...?

த்ரிஷாவும், ராணாவும் காதலிப்பதாக செய்தி வெளியான நாளிலிருந்து பலமுறை இருவரும் பிரிந்துவிட்டதாக வதந்திகளும் கிளம்பின. சமீபத்தில் மலேசியாவில் நடந்த SIIMA விருது விழாவில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர்.

சென்னையில் எங்கே விட்டாலும் சரியாக த்ரிஷாவின் வீட்டிற்கு சென்றுவிடுவேன். சென்னையில் எனக்குத் தெரிந்த ஒரே வீடு த்ரிஷாவுடையது என மேடையிலேயே சொன்னார் ராணா. நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த மிர்ச்சி சிவா இதைவைத்து ராணாவை கலாய்க்க, த்ரிஷாவும் வாய்விட்டு சிரித்தார்.
 
யார் கண்பட்டதோ. தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. முன்பு போல் இது வதந்தி இல்லை, உண்மை எனவும் கூறுகிறார்கள்.
 
இந்தப் பிரிவுக்கு ராணா பல பெண்களுடன் நெருக்கமான நட்பு வைத்திருப்பதே காரணம் எனவும் ஆந்திரா மீடியாக்கள் கூறுகின்றன. எவ்வளவு தூரம் இவை உண்மை என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் சொல்ல வேண்டும்.