1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 21 நவம்பர் 2014 (18:49 IST)

கல்யாண வதந்தி - கழற்றிவிடப்பட்ட த்ரிஷா

த்ரிஷாவுக்கும், வருண் மணியனுக்கும் திருமண நிச்சயம் நடந்துவிட்டது என்ற செய்தியை த்ரிஷா மறுத்தாலும் சமூகவலைத்தளத்தில் இவர்கள் நடத்தும் காதல் கண்ணாமூச்சி தொடரத்தான் செய்கிறது.

வருண் மணியன், மனைவியை சந்தோஷமாக வைத்திருப்பது எப்படி என்ற புத்தகம் கிடைத்துவிட்டது என்று ட்விட் போட த்ரிஷா அதற்கு ஸ்மைலி சிம்பல் போட்டிருக்கிறார்.
 
பொண்ணை காணோம் என்றதும் பந்தலை பிரிப்பதுதானே தமிழ் சினிமா வழக்கம். திருமண வதந்தி வந்ததுமே த்ரிஷாவை படத்திலிருந்து கழற்றிவிட ஆரம்பித்துள்ளனர்.
 
உதயம் படத்தை இயக்கிய மணிமாறன் அடுத்து ஜெய்யை வைத்து இயக்கும் படத்தில் த்ரிஷாதான் ஹீரோயின் என்று கூறி வந்தனர். திருமண வதந்தி வெளியான மறுநாளே த்ரிஷாவின் இடத்தில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார் சுரபி. அப்போ த்ரிஷா...?
 
வேறென்ன கல்தாதான்.