த்ரிஷாவை முற்றுகையிட்ட ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்

Sasikala| Last Modified வெள்ளி, 13 ஜனவரி 2017 (14:42 IST)
ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசிய த்ரிஷாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காரைக்குடியில் த்ரிஷா பங்குபெற்ற  படப்பிடிப்பை ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.

 
தமிழர்கள் நலன் மற்றும் கலாச்சாரத்தை ஒடுக்கும்விதத்தில் மத்திய பாஜக அரசு நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு தமிழ  மக்களின் உணர்வோடு கலந்த விஷயம். அதற்கு தடை விதித்ததை எதிர்த்து தமிழகம் முழுவதும் எழுச்சி போராட்டங்கள்  நடந்து வருகின்றன.
 
விலங்குநல ஆர்வலராக தங்களை காட்டிக் கொள்ளும் பல நடிகைகள் ஜல்லிக்கட்டுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.  அவர்களில் த்ரிஷாவும் ஒருவர். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில், காரைக்குடியில் த்ரிஷா கலந்து கொண்ட  படப்பிடிப்பை ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் முற்றுகையிட்டு த்ரிஷாவுக்கு எதிராகவும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் இட்டனர். அதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :