வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 27 மே 2014 (12:48 IST)

தடம் மாறாமல் தொடங்கிய இடம் மாறி இறங்கியவன்

எந்த ஒரு படமும் அறிவித்த தேதியில் தொடங்கி திட்டமிட்ட தினத்தில் முடிவது இல்லை. ஆனால் குறுகியகால திட்டமிடல் என்றாலும் மற்ற சில படங்களைப் போல் தடுமாறாமல் அறிவித்த தேதியில் தொடங்கியது இடம் மாறி இறங்கியவன்.
ஐ படத்தில் நடித்துவரும் விக்ரம்தான் இந்தப் படத்தின் ஹீரோ. ஐ வெளிவரும் முன்பு இடம் மாறி இறங்கியவனில் அவர் நடிக்க ஒரே காரணம், கோலிசோடா. சின்ன பசங்களை வைத்து பெரிய வெற்றியை தந்த கோலிசோடாவின் இயக்குனர் விஜய் மில்டன் இடம் மாறி இறங்கியவனை இயக்குகிறார். இதுவொரு ரோடு மூவி.
 
முருகதாஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறார். விக்ரமின் ஜோடி சமந்தா. இசை டி.இமான். இப்போதைக்கு இந்த விஷயங்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன. டி.இமான் தனது சமூகவலைத்தளத்தில் இன்று படம் ஆரம்பிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார்.