வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (12:44 IST)

கன்னடர்களிடம் வருத்தம் தெரிவித்தாலும் தமிழன் என்பதை நிரூபித்த நடிகர் சத்யராஜ் - வீடியோ!

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், சத்யராஜ், ராணா, நாசர் நடிகைகள் அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ரோஹினி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பாகுபலி 2' திரைப்படம் வருகிற 28-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஆந்திரா, தமிழகம் என‌ நாடு முழுவதும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

 
இந்நிலையில் கன்னட அமைப்பினர், ‘கடந்த 2008-ம் ஆண்டு நடந்த‌ காவிரி நதி நீர் போராட்டத்தின்போது, நடிகர் சத்யராஜ்  கர்நாடக அரசையும், கன்னட மக்களையும் மிகவும் இழிவாக பேசினார். எனவே அவர் நடிப்பில் வெளியாக உள்ள ‘பாகுபலி 2’  திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட விட மாட்டோம் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். 
 
‘பாகுபலி 2 ’ படத்தை திரையிடக் கூடாது எனவும் கோஷம் போட்டனர். அந்த சமயத்தில் சிலர், நடிகர் சத்யராஜின் உருவப்படம் அச்சிடப்பட்டிருந்த கட்- அவுட்டை தீவைத்து எரித்தனர். இதனால் பாகுபலி 2 திரைப் படம் கர்நாடகாவில் வெளியா வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 
இதனை தொடர்ந்து நடிகர் சத்யராஜ் யூ ட்யூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில் பாகுபலி 2 என்ற மிகப் பெரிய படத்தில் நான் ஒரு சிறு தொழிலாளிதான். என்னால் பிரச்சனை ஏற்படும் என்று கருதினால், என்னை  வைத்து படம் எடுக்க வேண்டாம். அனைத்து நியாமான பிரச்சனைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுப்பேன். நடிகனாக இருப்பதை  விட தமிழனாக இருப்பதே மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். மேலும் கன்னட மக்களுக்கு என் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இலங்கை தமிழ பிரச்சனை, காவேரி பிரச்சனை உட்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் வருங்காலத்தில் தமிழர்கள் நலன் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.