Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

துப்பாக்கி, தெறி, கத்தி சாதனையை எட்டிப்பிடித்த பைரவா

Sasikala| Last Modified வியாழன், 2 பிப்ரவரி 2017 (15:31 IST)
விஜய்யின் பம்பர்ஹிட் படங்களான துப்பாக்கி, கத்தி, தெறி படங்களின் சாதனையை பைரவாவும் எட்டிப் பிடித்திருக்கிறது. அது  என்ன சாதனை?

 
முன்னணி நடிகர்களின் படங்கள் 100 கோடி, 150 கோடி வசூலித்தது என்றால் அது தமிழக திரையரங்குகளில் இருந்து கிடைத்த  வசூல் மட்டும் அல்ல. உலகளாவிய வசூல். தவிர படத்தின் ஆடியோ மற்றும் தொலைக்காட்சி உரிமைகளும் இதில் அடங்கும். இதையெல்லாம் கழித்து, தமிழக திரையரங்கு வசூல் என்று பார்த்தால் முப்பதோ நாற்பதோ கோடிகள்தான் வரும். இதுவே  அதிகம்.
 
துப்பாக்கி, கத்தி, தெறி படங்கள் தமிழகத்தில் 40 கோடிகளுக்கு மேல் வசூலித்தன. அந்த சாதனையை பைரவாவும்  தொட்டிருக்கிறது. ஆம், பைரவா தமிழகத்தில் மட்டும் 40 கோடிகளை தாண்டியிருக்கிறது.
 
சாதனைதானே...?


இதில் மேலும் படிக்கவும் :