1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 30 ஏப்ரல் 2015 (15:48 IST)

தூக்குமர பூக்கள் - இன்னொரு இன்ஸ்டன்ட் வியாபாரம்

ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் உடனே அதனை படமாக்கி காசு பார்க்கும் மனநிலையின் விளைவுதான், தூக்குமரப் பூக்கள் என்ற திரைப்படம். 
 
ஆந்திராவில் 20 தமிழர்கள், செம்மரம் கடத்தினார்கள் என்று பொய் புகாரின் பேரில் சுட்டுக் கொல்லப்பட்ட கொடிய நிகழ்வை சித்தரிக்கிறது, தூக்குமர பூக்கள். இதற்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறவர் எழுத்தாளர் ராஜேஷ்குமார்.
 
20 தமிழர்கள் பொய் குற்றச்சாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட அவலத்தின் பின்னணி என்ன என்பதை அம்பலப்படுத்தப் போவதாக இந்தப் படத்தை இயக்கும் காளிதாஸ், அகஸ்டின் இருவரும் தொடை தட்டுகிறார்கள்.
 
ஆனால், இப்படி அவசர அவசரமாக தொடை தட்டப்படும் படங்கள் உண்மையும் அல்லாத பொய்யும் அல்லாத சம்பவத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லாத அரைவேக்காட்டு தொடை நடுங்கிகளாகத்தான் இதுவரை வெளிவந்துள்ளன. 
 
படம் வெளிவரும் முன்பே, தூக்கு மரமும் அப்படியொரு தொடை நடுங்கியாகத்தான் இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.