Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கேனத்தனமான டாஸ்க்: விஜய் டிவிக்கு வலுக்கும் எதிர்ப்பு


sivalingam| Last Modified வெள்ளி, 28 ஜூலை 2017 (22:59 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே ஜூலிக்கும், ஓவியாவுக்கும் பிரச்சனை நடந்து வருவது அனைவரும் தெரிந்ததே. இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று யோசிக்காமல் வேண்டுமென்றே ஒரு கேனத்தனமான டாஸ்க்கை கொடுத்து எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றி உள்ளனர் விஜய் டிவி.


 
 
ஜூலியை கிட்டத்தட்ட யாருக்குமே அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்கவில்லை ரைசாவை தவிர. இந்த நிலையில் அவரை ஜட்ஜ் ஆக்கியதே தவறு. சரி அப்படியே ஆக்கியிருந்தாலும், அவருக்கு ரெட் கார்ப்பெட் மரியாதை, தூக்கி செல்ல வேண்டும், அவரை நிழல் போல் ஒருவர் பாதுகாக்க வேண்டும், அவர் கேட்டதையெல்லாம் சமைத்து தர வேண்டும் என்று ஒரு டாஸ்க் கொடுப்பது மடத்தனம் என்று டுவிட்டரில் ஏராளமான பதிவுகள் வருகின்றது.
 
நிச்சயம் ஜூலிக்கு வெறுப்பு ஏற்படும்படிதான் இந்த டாஸ்க்கை ஓவியா உள்பட அனைவரும் எதிர்கொள்வர். ஆனாலும் ஓவியாவுக்கு கெட்ட பெயர் வரவழைக்க வேண்டும் என்று டிவி நிர்வாகம் நினைத்து இந்த டாஸ்க்கை கொடுத்திருந்தாலும் நிச்சயம் அவர்களது எண்ணம் ஈடேறாது. பிக்பாஸ் என்னதான் முயற்சி செய்தாலும் ஓவியாவுக்கு இனிமேல் கெட்ட பெயர் வரவழைக்க முடியாது என்பதே இயல்பான உண்மை என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :