Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கமல் புகைப்பிடிக்க காரணம் இவர்தானாம்!

Sasikala| Last Modified செவ்வாய், 10 ஜனவரி 2017 (16:09 IST)
இந்தியா டுடே மாநாட்டில் கமல் ஹாஸன் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் தனது திரையுலக பயணம்,  நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பாலிவுட் பற்றிய நினைவுகளை குறித்து பேசினார்.

 
சிவாஜி நான் ஒரேயொருவரால் தான் ஆரம்பித்தேன். நமக்கு எல்லாம் புகைப்பிடிக்கும் ஆசையை ஏற்படுத்தியவர்  மிஸ்டர் சிவாஜி கணேசன். அவர் புகைப்பிடிக்கும் ஸ்டைலை பார்த்தால் நாமும் புகைப்பிடிக்க வேண்டும் என்று தேன்றும். இந்த  பழக்கத்தால் என் நண்பர்கள் சிலர் புற்றுநோயால் இறந்துள்ளனர். கதாபாத்திரத்திற்கு தேவைப்பட்டால் நான் புகைப்பிடிக்கும்  காட்சிகளில் நடிப்பேன். 
 
திரை உலகில் சார்லி சாப்ளின், திலீப் குமார், மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோர் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் ஆவர்.  திலீப் சாபை சந்தித்து பேசிய வாய்ப்பு கிடைத்தபோது, நான் மண்டியிட்டு அவரது கையை முத்தமிட்டேன். இளம்  தலைமுறைக்கு திலீப் சாப் பற்றி தெரியாது.
 
மும்பை இந்தி சினிமாவில் நான் இருந்த நேரம் நானே என் வேலைகள் அனைத்தும் செய்தேன். அங்கிருந்தால் ஒன்று அதை  எதிர்க்க வேண்டும் இல்லை மிரட்டலுக்கு பணிய வேண்டும். அதனால் மும்பையில் இருந்து கிளம்பி வந்துவிட்டேன். இவ்வாறு  கமல் பேசினார்.


இதில் மேலும் படிக்கவும் :