Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இதுதான் ‘சங்கமித்ரா’வின் கதையாம்…

Cauveri Manickam| Last Updated: வியாழன், 18 மே 2017 (12:10 IST)
சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகும் ‘சங்கமித்ரா’வின் கதை என்னவென்று தெரியவந்துள்ளது.

 
‘பாகுபலி’ முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பையும், கலெக்‌ஷனையும் பார்த்து, தானும் ஒரு வரலாற்றுப் படத்தை எடுக்கப்  போவதாக அறிவித்தார் சுந்தர்.சி. ‘சங்கமித்ரா’ என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தை, 300 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீ  தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
 
பிரான்ஸில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில், இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது. இதற்காக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட படக்குழுவினர் பிரான்ஸ் சென்றுள்ளனர். இந்நிலையில், படத்தின் கதை என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது. எட்டாம் நூற்றாண்டில் வாழ்கிற இளவரசி சங்கமித்ரா தான் ஸ்ருதியாம். பேரழகியான அவள், மற்ற அரசர்களிடம் இருந்து தன்னையும், தன் ராஜ்ஜியத்தையும் காப்பாற்றிக் கொள்ளப்  போராடுவதுதான் கதையாம்.


இதில் மேலும் படிக்கவும் :