1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 30 மார்ச் 2016 (17:55 IST)

தெறி தொலைக்காட்சி உரிமைக்கு போட்டா போட்டி

தெறி தொலைக்காட்சி உரிமைக்கு போட்டா போட்டி

விஜய் - அட்லி இணைந்துள்ள படம் என்பதால் தெறி உரிமையை வாங்க கடும் போட்டி நிலவுகிறது. 


 


படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்குவதில் விஜய் தொலைக்காட்சி மும்முரமாக உள்ளது.
 
மூன்று வருடங்களுக்கு முன்பு என்றால், சின்ன நடிகர்களின் படமும் ஐந்தும் ஆறும் கோடிகளுக்கு விலை போகும். 
 
சிவகார்த்திகேயன் படங்கள் 12 கோடிகள்வரை போயிருக்கின்றன. ஆனால், இப்போது நிலைமை தலைகீழ. விஜய் படமே 15 கோடிக்கு போனால் அதிகம்.
 
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி தெறி தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்கு 20 கோடிகள்வரை தர முன்வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தெறியின் பாடல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சியை விஜய் ஒளிபரப்புவதால் படத்தின் தொலைக்காட்சி உரிமையையும் அவர்கள் வாங்கவே அதிக சாத்தியம் உள்ளது.