வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (11:07 IST)

ஒரே நடிகர் அருண் விஜய் - கௌதமின் புகழாரம்

அருண் விஜய் நடித்துள்ள குற்றம் 23 படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பாடல்களை இயக்குனர் கௌதம் வெளியிட, ஜெயம் ரவி பெற்றுக் கொண்டார்.


 


விழாவில் பேசிய கௌதம், அருண் விஜய்யை புகழ்ந்தார். என்னை அறிந்தால் படத்தின் சண்டைக் காட்சியில் ஒத்திகை எதுவும் பார்க்காமல்  நடித்துள்ளார் அருண் விஜய். 
 
அதனை தனது பேச்சில் குறிப்பிட்ட கௌதம், நான் பணியாற்றிய நடிகர்களில் எந்தவொரு ஒத்திகையும் இல்லாமல் சண்டைக் காட்சியில் நடித்த ஒரே நடிகர் அருண் விஜய்தான் என்று பாராட்டினார்.
 
அதேபோல், குற்றம் 23 படத்தின் இயக்குனர் அறிவழகனின் ஈரம் படத்தையும், அவரது தொழில்நுட்ப நேர்த்தியையும் கௌதம் வெகுவாக பாராட்டினார்.
 
குற்றம் 23 படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். அருண் விஜய் இதில் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.