செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 9 ஜூன் 2019 (15:08 IST)

’விஜய் 63’ படத்தின் முக்கிய அப்டேட் - வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய்.  இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளனர். இப்படத்துக்கான ஆடியோ உரிமையை ரூ 5 கோடிக்கு விற்க உள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய தகவலை இயக்குநர் அட்லி வெளியிட்டுள்ளார்.
விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜிஉள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார்.
 
விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியின்பயிற்சியாளராக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் ஷாரூக்கான் வில்லன் கதாபாத்திரத்தில் தோன்ற உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதியன்று வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இப்படத்தில் பாடல்கள் ஏற்கனவே தயாராகிவிட்டதாக ஏ.ஆர்  ரஹ்மான் தெரிவித்தார்.இதையடுத்து தற்போது 3 வது பாடலுக்கான பணிகள் தயாராகிவருகிறது.
 
இந்தப் பாடலின் ரெகார்ட்டிங் பணிகளின் போது,இயக்குநர் அட்லி ஒரு புகைப்படம் எடுத்து அதை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகிவருகிறது.