Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கதாநாயகி முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

Sasikala| Last Modified சனி, 8 ஜூலை 2017 (15:32 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் பல வெற்றி படங்களை தந்திருந்தாலும், தனது நடிப்பால் ரசிகர்களை கவரும் விதமான  கேரக்டர்களை செய்யவில்லை. ஆனால் தெலுங்கில் நடித்த “நேனு சைலஜா” படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து நல்ல பெயர் வாங்கிவிட்டார்.

 
 
நேனு சைலஜா படத்தில் அந்த அளவுக்கு அழுத்தமான கதாநாயகிக்கு முக்கியத்தும் தரும் கதாபாத்திரத்தில் நடித்ததின்  விளைவுதான், சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்க காரணமாக அமைந்ததாம். இந்நிலையில் பாகுபலி 2  பாகத்தை தயாரித்த ஆர்கே மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சர்வானந்த் நாயகனாக வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :