Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கிரிக்கெட் வீரர் கங்குலி பற்றி கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய நடிகை கஸ்தூரி!

Sasikala| Last Modified சனி, 8 ஜூலை 2017 (10:23 IST)
நடிகை கஸ்தூரி ட்விட்டரில் ரொம்பவே ஆக்டிவாக தொடர்ந்து தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார். சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து தனது சர்ச்சை கருத்துகளை அவ்வப்போது ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். இதனால் கஸ்தூரியின் சில கருத்துக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் கிடைத்தாலும், அதே நேரத்தில் விமர்சனங்களும்  வருகின்றன.

 
 
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சிம்பு நடிப்பில் வெளியான AAA படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் இன்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலியின் பிறந்தநாள், இதற்காக பலரும் தங்கள் வாழ்த்துக்களை அவருக்கு சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

 
இந்நிலையில் நடிகை கஸ்தூரி ‘நான் உங்களுடைய தீவிர ரசிகையாக இருந்தேன், உங்களை பார்க்கும் வரை’ என்று கூறியுள்ளார். இவை ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடுப்பான கங்குலியின் ரசிகர்கள் இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :