Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கருத்துப் பாட்டுக்கு ஆடும் சன்னி லியோன்

Sasikala| Last Modified சனி, 11 மார்ச் 2017 (10:47 IST)
பாலிவுட் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், முதன்முறையாக கருத்துப் பாட்டு ஒன்றுக்கு நடனமாடப் போகிறார்.

 
பிரவீன் சட்டரு இயக்கும் தெலுங்குப் படத்தில்தான் இந்தப் பாட்டு இடம்பெறுகிறது. ராஜசேகர் நாயகனாக நடிக்கும் இந்தப்  படத்தில், பூஜா குமார், ஷ்ரத்தா தாஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். 
 
படத்தின் இரண்டாம் பாதியில், கதையின் போக்கை விவரிக்கும் கருத்தாழம் மிக்க பாடல் ஒன்று இடம்பெறுகிறது. இந்தப் பாட்டுக்கு அனைவருக்கும் தெரிந்த முகம் கொண்டவர் நடனமாடினால் நன்றாக இருக்கும் என்று விரும்பிய இயக்குநர், உடனடியாக சன்னி லியோனைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவரும் சம்மதம் சொல்ல, விரைவில் கேரளாவில்  ஷூட்டிங் நடைபெற இருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :