வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 14 மார்ச் 2017 (15:14 IST)

நகரத்துப் பெண்ணாக நடிக்கும் நிகிலா விமல்

கிராமத்துக் கதைகளில் நடித்துவந்த நிகிலா விமல், அடுத்து நடிக்கும் படத்தில் முதன்முறையாக நகரத்துப் பெண்ணாக நடிக்கப்  போகிறார்.

 
 
 
சசிகுமார் ஜோடியாக ‘வெற்றிவேல்’, ‘கிடாரி’ படங்களில் நடித்தவர் நிகிலா விமல். இந்த இரண்டு படங்களிலுமே பக்கா கிராமத்துப் பெண்ணாக நடித்தார். அவருடைய முகமும் அதற்கு பொருந்திப் போனது. 
 
ஆனால், தற்போது வினோத் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில், மாடர்ன் பெண்ணாக நடிக்கிறார். இதில், அவருக்கு ஜோடி சிபிராஜ். ஆக்‌ஷன் திரில்லரான இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகள், காஷ்மீரில் படமாக்கப்பட உள்ளன.