1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2017 (10:42 IST)

அப்போ சிவகார்த்திகேயன், இப்போ விஜய் சேதுபதி?

சிவகார்த்திகேயனை இயக்கிய திருக்குமரன், அடுத்ததாக விஜய் சேதுபதியை இயக்கப் போகிறார் என்று தகவல்  வெளியாகியுள்ளது.

 
உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கெத்து’, சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படங்களை இயக்கியவர் திருக்குமரன். தன்னுடைய அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார். இந்தப் படத்தில், விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்று தகவல்  வெளியாகியுள்ளது. அதுவும் ஏ.ஆர்.முருகதாஸ் தான் அவரைப் பரிந்துரை செய்துள்ளார் என்கிறார்கள்.
 
விசாரித்தால், ஒவ்வொரு முறை கதை எழுதி முடித்ததும், தன்னுடைய குருவான ஏ.ஆர்.முருகதாஸிடம் சொல்வாராம்.  முழுக்கதையையும் கேட்கும் முருகதாஸ் யாரைச் சொல்கிறாரோ, அவர்தான் அந்தப் படத்துக்கு ஹீரோ. உதயநிதி  ஸ்டாலினையும், சிவகார்த்திகேயனையும் அப்படித்தான் செலக்ட் செய்தாராம் திருக்குமரன். தற்போது, விஜய் சேதுபதியைக் கைகாட்டியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அவரிடம் கதை சொன்ன திருக்குமரன், பதிலுக்காக காத்திருக்கிறார்.