தர்ஷனின் காதலி சிம்புவுடன் செல்ஃபி - சூப்பர் வைரலாகும் புகைப்படம்!

Last Updated: புதன், 17 ஜூலை 2019 (17:43 IST)
பிக்பாஸ் வீட்டின் செல்லப்பிள்ளையாகவும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளராகவும் வலம் வருபவர் தர்ஷன். யாருடைய வெறுப்புக்கும் ஆளாகாமல், அநியாயத்தை தட்டிக்கேட்கும் நபராக எல்லோருடைய மனதையும் ஈர்த்துவிட்டார். 


 
தர்ஷனுக்கு அழகான காதலி இருப்பதாக பிக்பாஸ் வீட்டில் கூறியிருந்தார். சமீபத்தில் கூட அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. நடிகையும் மாடல் அழகியான சனம் ஷெட்டி தற்போது சிம்புவை சந்தித்து செல்ஃபி எடுத்துள்ளார். 


 
அதனை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அவர்,  நான் யாரை சந்தித்தேன் என்று பாருங்கள். இன்றைய  தலைமுறையினருக்கு டிரெண்ட்செட்டிங்காக இருக்கும் படங்களை அவ்வப்போது அளிக்கும் தி ஒன்ட் அன்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார். சிம்புவின் அறிவை பார்த்து வியந்துவிட்டேன். சினிமா முதல் வாழ்க்கை வரை அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளார். உங்களை சந்தித்ததில் பெருமையாக உள்ளது டியர் சிம்பு என்று தெரிவித்து நெகிழ்ச்சியுடன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 


 
மேலும் , பிக்பாஸ் வீட்டில் பெருந்தன்மையாக நடந்துகொள்ளும் தர்ஷன் தனது காதலனாக கிடைத்ததை எண்ணி பெருமையடைகிறேன். ஆனால்,  வீட்டில் இருப்பவர்களோ தர்ஷனின் பெயரை கெடுக்க வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் முக்கியமான மீரா. தர்ஷனிடம் யாரும் வாலாட்ட முடியாது என்று நம்பிக்கையுடன் பேசியுள்ளார் சனம் ஷெட்டி. 
 
தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :