வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 3 ஜூன் 2014 (11:10 IST)

தாரை தப்பட்டைக்காக கடும் பயிற்சியில் சசிகுமார்

பாலாவின் தாரை தப்பட்டை படத்துக்காக கடும் பயிற்சி எடுத்து வருகிறார் சசிகுமார். அவரது பயிற்சி காரணமாகவே படப்பிடிப்பு தள்ளிப் போகிறது.
கரகாட்டத்தை மையமாக வைத்து பாலா எழுதிய கதை தாரை தப்பட்டை. ஸ்கிரிப்டை முழுமையாக முடித்து இளையராஜாவின் இசையில் 12 பாடல்களை ஒலிப்பதிவும் செய்துவிட்டார். கிராமியக் கலையை மையப்படுத்திய படம் என்பதால் தொழில்முறை இசைக்கலைஞர்களை தவிர்த்து நிஜமான கிராமியக் கலைஞர்களை வைத்து பாடல்களை ஒலிப்பதிவு செய்தார் இளையராஜா.
 
படத்தின் ஸ்கிரிப்ட், பாடல்கள் அனைத்தும் தயார். எப்போது வேண்டுமானாலும் படப்பிடிப்புக்கு கிளம்ப மொத்த யூனிட்டும் தயார். ஆனால் சசிகுமார் மட்டும் இன்னும் தயாராகவில்லை.
 
கடந்த மூன்று மாதங்களாக கரகாட்டத்துடன் நாதஸ்வரம், மிருதங்கள் என பல்வேறு இசைக்கருவிகளை எப்படி இசைப்பது என பயிற்சி எடுத்து வருகிறார். படத்தில் இந்த இசைக்கருவிகளை பயன்படுத்துவதால் காட்சி தத்ரூபமாக வருவதற்காக முறையாக நாதஸ்வரமும், மிருதங்கமும் படித்து வருகிறார். இந்தப் பயிற்சி காரணமாகவே தாரை தப்பட்டையின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பமாகவில்லை என படயூனிட் தெரிவிக்கிறது.
 
பரதேசிக்கு ஒளிப்பதிவு செய்த செழியனே தாரை தப்பட்டைக்கும் கேமராமேன். வரலட்சுமி நாயகியாக நடிக்கிறார். பாலாவும், சசிகுமாரும் இணைந்து தாரை தப்பட்டையை தயாரிப்பதாக கூறப்படுகிறது.