1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 23 மார்ச் 2017 (18:46 IST)

நீ என்ன புரட்சி பண்ண? புரட்சிதளபதிங்கிற..... தம்பி கொஞ்சம் அடக்கி வாசி; தாணு எச்சரிக்கை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தலில் போட்டியிடும் முன்னேற்ற அணியினர் செய்தியார்கள் சந்திப்பில், பிரச்சனைக்கு பயந்து பதுங்கிற நீயெல்லாம் பாயும் புலியா? நீ என்ன புரட்சி பண்ண? புரட்சி தளபதிங்கிற... என கலைப்புலி எஸ் தாணு விஷாலை கடுமையான தாக்கினார்.



 

 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தலில் விஷால் அணியினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். விஷால் அணியை எதிர்க்க தேர்தலில் போட்டியிடும் மற்ற அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து ஒரு அணியாக மாறியுள்ளனர்.
 
இந்த முன்னேற்ற அணி செய்தியாலர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. இதில் கலைப்புலி எஸ் தாணு விஷாலை கடுமையாக தாக்கி பேசினார். அவர் கூறியதாவது:-
 
இளையதலைமுறைக்கு வழிகொடுப்போம்ன்னு நான் விலகியிருந்தேன். ஆனால், விஷாலின் பேச்சு, நடை, உடை, பாவனை எல்லாம் பார்க்கும்போது இது தவறான முன் உதாரணமாகிவிடக் கூடாது என்பதற்காக நான் வந்தேன்.
 
பாயும்புலி படத்தின் சிக்கல் வந்த போது விஷால் எங்க இருந்தாரு? போனை ஆப் செய்துவிட்டு பதுங்கிட்டார். பிரச்சனைக்கு பயந்து பதுங்கிற நீயெல்லாம் பாயும் புலியா?
 
நீ என்ன புரட்சி பண்ண? புரட்சிதளபதிங்கிற.. உன்னைப் பத்தி ஏகப்பட்ட புகார்கள் இருக்கு. தம்பி நாக்கை கொஞ்சம் அடக்கி பேசு. சங்கத்தில் கஷ்டத்தில் உள்ள தயாரிப்பாளர்களில் 12 பேர் விஷாலை வைத்துப் படமெடுத்தவர்கள் தான், என கூறியுள்ளார்.