மலேசியாவில் படமான ‘தமிழ்ப்படம் 2.0’

Thamizh Padam 2.0
CM| Last Updated: வெள்ளி, 2 மார்ச் 2018 (22:36 IST)
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தமிழ்ப்படம் 2.0’ படத்தின் ஷூட்டிங் மலேசியாவில் நடைபெற்றுள்ளது.


 
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘தமிழ்ப்படம் 2.0’. 2010ஆம் ஆண்டு ரிலீஸான ‘தமிழ்ப்படம்’ படத்தின் தொடர்ச்சியாக இது உருவாகிறது. ‘மிர்ச்சி’ சிவா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், திஷா பாண்டே மற்றும் ஐஸ்வர்யா மேனன் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் சில காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :