கேரள இளம்பெண்கள் கொண்டாடிய விஜய் பிறந்த நாள்


sivalingam| Last Modified வெள்ளி, 9 ஜூன் 2017 (23:41 IST)
இளையதளபதி விஜய் பிறந்த நாளுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் கூட இல்லாத நிலையில் அவருடைய ரசிகர்கள் அட்வான்ஸாக இப்பொழுது முதலே விஜய் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவிலும் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. குறிப்பாக கேரள இளம்பெண்கள் விஜய்யின் தீவிர ரசிகைகளாக உள்ளனர்.


 


இந்த நிலையில் கேரளாவில் உள்ள 'விஜய் இதயம் கேர்ள்ஸ் அசோசியேஷன்' என்ற அமைப்பின் சார்பில் இன்று விஜய் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. திருவனந்தபுரம் அருகில் அம்மாதொட்டி என்ற பகுதியில் உள்ள அனாதை இல்லம் ஒன்றில் இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

பெரிய கேக் வெட்டி, அனாதை இல்லத்தில் இருப்பவர்களுக்கு அறுசுவை உணவு கொடுத்து இளம்பெண்களின் குழு இந்த பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர். இதோடு மட்டுமின்றி இன்னும் சிறுவர் இல்லம், முதியோர் இல்லம் ஆகியவற்றிலும் சென்று விஜய்யின் பிறந்த நாளை கொண்ட திட்டமிட்டுள்ளதாக இளம்பெண்கள் கூறினர்.


இதில் மேலும் படிக்கவும் :