Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தல, தளபதியை ஒப்பிடும் காஜல் அகர்வால்!

Sasikala| Last Modified புதன், 4 ஜனவரி 2017 (17:48 IST)
முன்னணி நடிகையாக வலம்வரும் காஜல் அகர்வால் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். 2009ஆம் ஆண்டு இவர்  நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது.

 
இதனை தொடர்ந்து பல முன்னணி கதாநயகர்களுடன் நடித்துள்ளார். தற்போது தமிழில் வெளியான கத்தி ரீமேகில் கைதி நெ.  150 என்ற பெயரில் தெலுங்கில் எடுத்துள்ளனர். அதில் சிரஞ்சீவி, காஜல் அகர்வால் நடித்துள்ளனர். இந்நிலையில் விஜய்யின்  61வது படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
 
காஜல் தற்போது அஜீத்துடன் தல 57 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தல மற்றும் தளபதி இடையேயான வித்தியாசம்  குறித்து அவர் கூறுகையில், அஜீத்தும் சரி, விஜய்யும் சரி பெரிய நடிகர்கள். இருவருமே தலைக்கனம் இல்லாதவர்கள், நட்பை  மதிப்பவர்கள். அவர்களுக்கு இடையே வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
 
காஜல் அகர்வால் விஜய்யுடன் ஜில்லா, கத்தி ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :