Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தெலுங்கு ரீமேக் - போட்டியில் விஜய் சேதுபதி, சிபி, ஜீ.வி.பிரகாஷ்

Sasikala| Last Modified வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (11:29 IST)
தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம், எக்கடிக்கி போதாவு சின்னவாடா. ஆனந்த் இயக்கத்தில் நிகில் சித்தார்த், ஹேபா  பட்டேல், நந்திதா, அவிகா கோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்தப் படம் வெளியானது.

 
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்ற இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய முயற்சி  நடக்கிறது. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், தெலுங்குப் படத்தின் தயாரிப்பாளருடன் இணைந்து தமிழில் இதனை ரீமேக் செய்கிறார். இதில் நடிக்க விஜய் சேதுபதி, சிபி, ஜீ.வி.பிரகாஷ் ஆகியோர் ஆர்வம் காட்டுகின்றனர்.
 
இந்த ஆந்திரா முந்திரி யார் வாயில் அகப்படப் போகிறதோ?


இதில் மேலும் படிக்கவும் :